Your cart is empty.
ஜியாவுதீன் ஸர்தார்
பிறப்பு: 1951
லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டம், சமூகவியல் துறைகளின் முன்னாள் பேராசிரியர். இஸ்லாம் குறித்த முன்னோடி எழுத்தாளரான இவர் கலாச்சாரப் பிரச்சினைகள் பற்றியும் எழுதிவருகிறார். 1974 முதல் 1979வரை சவுதி அரேபியாவிலுள்ள ஜித்தாவில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் ஹஜ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் தனது முதல் நூலான ‘முஸ்லிம் உலகில் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி’, (1977) பற்றிய ஆராய்ச்சிக்காக இஸ்லாமிய உலகு முழுவதும் பயணம்செய்தார். ஐம்பதுக்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். Critical Muslim என்னும்காலாண்டிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.
இவர் எழுதிய ‘Why do people hate America?’ (2002) என்னும் புத்தகம் சர்வதேச அளவில் அதிக விற்பனையாகும் நூலாகும். இவர் எழுதிய ‘Desperately Seeking Paradise: Journeys of a Sceprical Muslim’ (2004) என்னும் சுயசரிதை இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. ‘Balti Britain: A provocative Journey Through Asian Britain’ (2008) என்னும் பயண நூலையும் எழுதியுள்ளார்.
பொது அறிவுஜீவிகளில் ஒருவராகப் பரவலாக அறியப்படும் ஜியாவுதீன் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நபிகள் நாயகம்: சில முக்கியக் குறிப்புகள்
உண்மையான முகம்மது யார் ?
இஸ்லாம் குறித்து எழுதும் நிபுணர்களில் ஜியாவுதீன் ஸர்தாரும் ஓருவர மேலும்