Your cart is empty.
அடூர் கோபாலகிருஷ்ணன்
பிறப்பு: 1941
அடூர் கோபாலகிருஷ்ணன் (1941) மௌட்டத்து கௌரி குஞ்ஞம்மா - பள்ளிப்பாட்டு மாதவன் உண்ணித்தான் தம்பதியரின் ஏழு மக்களில் ஆறாவதாகப் பிறந்தவர். காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகம், பொருளியல், அரசியல் துறைகளில் பயின்று பட்டம் பெற்றார். 1962இல் புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தார். பதினோரு கதைப்படங்களையும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் எழுதி இயக்கியுள்ளார். சிறந்த திரைப் படத்துக்காக இரு முறையும் சிறந்த திரைக்கதைக்காக மூன்று முறையும் சிறந்த இயக்கத்துக்காக ஐந்து முறையும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 1983இல் பத்மஸ்ரீ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எல்லாப் படங்களும் கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் பெற்றன. கேரள சலச்சித்ர அக்காதெமியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ‘மிக அசலானதும் படைப்பூக்கம் நிரம்பியதுமான’ படமாக ‘எலிப்பத்தாயம்’ தேர்ந்தெடுக்கப்பட்டு பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் விருது 1982இல் அடூருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆறு முறை சர்வதேச திரைப்பட விமர்சகர்களின் அமைப்பு விருதுகளை (ஃபிப்ரசி அவார்ட்) பெற்றிருக்கிறார். பிரெஞ்சு அரசு வழங்கும் மிக உயர்ந்த கலை பண்பாட்டு விருதான ‘கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்’ அங்கீகாரம் பெற்றவர். இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது 2004இல் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. அடூரின் படங்கள்: ‘சுயம்வரம்’ (1972), ‘கொடியேற்றம்’ (1977), ‘எலிப்பத்தாயம்’ (1981), ‘முகாமுகம்’ (1984), ‘அனந்தரம்’ (1987), ‘மதிலுகள்’ (1989), ‘விதேயன்’ (1993), ‘கதாபுருஷன்’ (1995), ‘நிழல்குத்து’ (2003), ‘நாலு பெண்ணுங்ஙள்’ (2007), ‘ஒரு பெண்ணும் ரண்டு ஆணும்’ (2009).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சினிமா அனுபவம்
இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தனது அனு மேலும்