Your cart is empty.
அகமத் ஹம்தி தன்பினார்
பிறப்பு: 1901
அகமத் ஹம்தி தன்பினார் (1901 – 1962) கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், இலக்கிய வரலாற்றாளர், துருக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணம் கொண்ட தன்பினார் இஸ்தான்புல்லில் பிறந்தார். அவரது தந்தை ஒரு காதி (இஸ்லாமிய நீதிபதி). இஸ்தான் பல்கலைக்கழகத்திலிருந்து இலக்கியத்தில் பட்டம்பெற்ற அவர் பள்ளி ஆசிரியராகவும், பின்னர் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1942 முதல் 1946வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1962இல் இறந்தார். அவர் இறந்து சில காலத்திற்குப் பிறகுதான் அவரது படைப்புகள் உரிய அங்கீகாரத்தைப் பெற்றன. துருக்கிய மொழியின் மிக முக்கியமான நாவலாசிரியராகக் கருதப்படுகிறார். ஓரான் பாமுக் போன்ற நோபல் பரிசு பெற்ற பின்னாளைய நாவலாசிரியர்கள் தங்கள் படைப்புகளில் தன்பினாரின் பதிப்பைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.