Your cart is empty.
அலே(ன்) மபாங்க்கு
பிறப்பு: 1966
காங்கோ குடியரசைச் சேர்ந்தவர். பிராஸாவீல்லிலும் பாரிசிலும் சட்டம் பயின்றவர். பிரான்ஸின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர். அவரது முதல் நாவல் 1998ஆம் ஆண்டு வெளியானது.
இந்த நாவல் 2006ஆம் ஆண்டு பிரான்ஸின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாகிய ரெனோதோ விருதை (Prix Renaudot) வென்றிருக் கிறது. அவருடைய இன்னொரு நாவலாகிய வேர்கஸ்ஸே, 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நாவல் களில் ஒன்று என The Guardian புகழாரம் சூட்டியிருக்கிறது.
ஆப்பிரிக்க நாவல்கள் பலவற்றை ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தற்சமயம் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராகப் பணியாற்றிவருகிறார்.
