Your cart is empty.
அம்ஷன் குமார்
அம்ஷன் குமார் அம்ஷன் குமார் நல்ல சினிமா குறித்த ரசனையையும் கண்ணோட்டத்தையும் உருவாக்கத் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். ரசனை அடிப்படையில் திரைப்படங்களை அணுக உற்சாகப்படுத்தும் இவரது ‘சினிமா ரசனை’ அவ்வகையில் தமிழின் முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. ‘எழுத்தும் பிரக்ஞையும்’, ‘பேசும் பொற்சித்திரம்’ ஆகியன இவரது பிற நூல்கள். ‘மூன்றாம் தியேட்டர்’, ‘சுப்பிரமணிய பாரதி’, ‘சி.வி. ராமன்’, ‘அசோகமித்திரன்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களையும், ‘ஒருத்தி’ என்கிற முழு நீளப் படத்தினையும் இயக்கியுள்ளார். சென்னையில் வசிக்கிறார்.