Your cart is empty.
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
பிறப்பு: 1931
ராமேஸ்வரத்தில் எளிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர். போராட்டங்கள் மிகுந்த பால்யப் பருவத்திலேயே வானத்தில் பறக்கும் கனவுகளைக் கொண்டிருந்தார். கடின உழைப்பு, கனவுகளை நனவாக்குவதில் தீவிரமான முனைப்பு, சவால்களையும் இடர்களையும் வாய்ப்புகளாகக் காணும் நோக்கு, புதுமைகளில் நாட்டம், தலைமைப் பண்பு ஆகியவற்றால் படிப்படியாக முன்னேறினார். இந்தியாவின் சுதேசி ஏவுகணைத் திட்டங்களின் சிற்பிகளில் ஒருவர். எஸ்.எல்.வி.-3, பிருத்வி, அக்னி போன்ற சாதனைகளின் முக்கியமான பங்காளி. இந்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இவர் செய்த சாதனைகள் இந்தியப் பாதுகாப்புப் துறையை வலுவூட்டப் பெரிதும் பங்களித்துள்ளன. இவரது பணிகளின் பலனாகப் பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா ஆகிய உயரிய விருதுகளை இந்திய அரசு இவருக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது. 2002முதல் 2007வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.