Your cart is empty.

க. அரவிந்த் குமார்
பிறப்பு: 1980
க. அரவிந்த் குமார் (பி. 1980) வடசென்னையின் புதுவண்ணாரப்பேட்டையில் பிறந்தார். பள்ளிப்படிப்பை வடசென்னையிலும் கல்லூரிப் படிப்பை மீனம்பாக்கத்திலும் முடித்தார். தற்போது குரோம்பேட்டையில் வசித்துவருகிறார். அச்சு ஊடகத் துறையில் செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கிப் பல செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராகவும் இருந்துள்ளார். ‘வனம், வானம், வாழ்க்கை’ என்ற கட்டுரைத் தொகுதி இவருடையது. முன்னணி இதழ்களில் சிறுகதைகளை எழுதிவருகிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.