Your cart is empty.
அரவிந்தன்
பிறப்பு: 1964
அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வெல்கம் டு மில்லெனியம்
அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவ மேலும்
பயணம்
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை மேலும்
பொன்னகரம்
மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்ச மேலும்
பயணம்
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை மேலும்
கடைசியாக ஒரு முறை
தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை ம மேலும்
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட மேலும்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை. நூல்க மேலும்
தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்
எழுத்தாளரும் இதழியலாளருமான அரவிந்தன் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் த மேலும்
இதுதான் உங்கள் அடையாளமா?
சமூக வலைதளங்களின் உபயத்தால் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்கள் பொதுவெளியில் பெருகிவிட்ட காலம் இது. மேலும்
கேளிக்கை மனிதர்கள்
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த் மேலும்
ஒரு சொல் கேளீர்
பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்யுள் வழக்கை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட இலக்கண விதிகளையே தமிழ்மொழிய மேலும்