Your cart is empty.
அரவிந்த மாளகத்தி
பிறப்பு: 1956
அரவிந்த மாளகத்தி (பி. 1956) மைசூர் பல்கலைக்கழகத்தில் குவெம்பு கன்னட ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் அரவிந்த மாளகத்தி கன்னட தலித் இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவர். பிஜாப்புர மாவட்டத்தில் உள்ள முத்தேபீஹால் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தாயின் பெயர் பசவ்வா. தந்தையின் பெயர் யல்லப்பா. தார்வாடில் இயங்கும் கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்க விருதோடு நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கவிஞராக அறிமுகமாகி நாடகம், நாவல், சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் இயங்கி வருபவர். ஒன்பது கவிதை தொகுதிகள், இரண்டு நாடகங்கள், ஒரு சிறுகதைத் தொகுதி, ஒரு நாவல் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கன்னட நாட்டுப்புறவியல் ஆய்விலும் இலக்கிய விமர்சனத் துறையிலும் இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் தலித் தன்வரலாற்று நூல். ‘இறுதிச்சடங்கு’ இவருடைய முக்கியமான நாவல். கர்நாடக சாகித்திய அக்காதெமி விருது, கர்நாடக அரசு வழங்கும் அம்பேத்கர் விருது, நரசிம்மையா விருது பெற்றிருக்கிறார்.