Your cart is empty.
அருணா ராய்
பிறப்பு: 1946
ஒருமித்த குரலும் ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியும்
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையி ல்
மாற்றங்களைக் கொணரும் என்பதை ராஜஸ்தானில்
நிகழ்த்திக்காட்டியவர் அருணா ராய்.
அருணா ராய், இந்திய ஆட்சித்துறைப் பணியை
ராஜினாமா செய்துவிட்டு ராஜஸ்தானின் தேவ் துங்ரி
என்ற குக்கிராமத்தில் தன்னைப் போல் இலட்சிய
ந�ோக்கம் கொண்ட சங்கர், நிகில், அன்ஷி ஆகியோருடன்
இணைந்து 1987இல் ‘மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன்’
என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். ஓர் எழுச்சிப்
பயணத்தின் தொடக்கமாக அமைந்த இது, 2005இல்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில்
நிறைவேறுவதற்கு விதையாகவும் அமைந்தது.
சில ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராக இருந்த இவர்,
இந்தியத் தேசியப் பெண்கள் சம்மேளனத்தின் தலைவர்.
தகவல் பெறும் உரிமை, வேலைக்கான உரிமை,
உணவுக்கான உரிமை போன்ற முக்கிய இயக்கங்களில்
முன்னணியில் நின்று பணிபுரிந்திருக்கிறார்.
தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த இவர்
2006இல் அந்தப் பதவியிலிருந்து விலகினார். 2016ஆம்
ஆண்டில் மாண்ட்ரியல் McGill பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
2000இல் சமூகத் தலைமைக்கான ரமோன் மேக்சேஸே
விருது, 2010இல் லால்பகதூர் சாஸ்திரி தேசிய விருது
ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.