Your cart is empty.
அருந்ததி ராய்
பிறப்பு: 1961
அருந்ததி ராய் (பி. 1961) அருந்ததி ராய் இந்தியாவின் நட்சத்திர எழுத்தாளர்; களப்பணியாளர். இவரது நாவலான ‘The God of Small Things’ (சின்ன விஷயங்களின் கடவுள்) புக்கர் பரிசு பெற்றதும் உலகப் புகழை அடைந்தார். பின்னர் மேதா பட்கரின் ‘நர்மதா பச்சாவோ அந்தோல’னில் (நர்மதாவைக் காப்பாற்றும் போராட்டம்) தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய அரசமைப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீரிகள், ஆதிவாசிகள் முதலிய பலருக்காகவும் குரல் எழுப்பிவருகிறார். இந்துத்துவத்தின் கடுமையான விமர்சகர். தலித் விடுதலையில் ஆழ்ந்த கரிசனம் கொண்டவர். ஆய்வின் வலுக்கொண்ட அவரது கட்டுரைகள் அவற்றின் கருத்துகளுக்காகவும் நடைக்காகவும் உலகக் கவனம் பெற்றவை.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சின்ன விஷயங்களின் கடவுள்
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும மேலும்
காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாப மேலும்
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந் மேலும்
நொறுங்கிய குடியரசு
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப் மேலும்