Your cart is empty.
பாப்லோ நெரூடா
பிறப்பு: 1904 - 1973
பாப்லோ நெரூடா சிலி நாட்டில் பிறந்த பாப்லோ நெரூடா (1904-1973) இருபதாம் நூற்றாண்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுபவர். இருபது வயதில் அவர் எழுதி வெளியிட்ட ‘இருபது காதல் கவிதைகளும் நிராசைப் பாடல் ஒன்றும்’ அவருக்குப் புகழ் தேடித்தந்தது. 1927 முதல் 1945 வரை பர்மா, சாவகம், இலங்கை, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தூதுவராகப் பணியாற்றினார். ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட அனுபவங்கள் அவரைக் கம்யூனிஸ்டாக்கின. ‘கவிதை ஒரு தொழில்’ என்று கூறிய நெரூடாவின் கவிதைகள், பன்முகத்தன்மை வாய்ந்தவை. அவருடைய பிற்காலக் கவிதைகள் நேரிடையாக மக்களை நோக்கிப் பேசின. 1971இல் நொபேல் பரிசு பெற்றார். தேர்தலில் வெற்றிபெற்ற சோசலிசக் கூட்டணி அரசின் சார்பாக பிரான்சிற்குத் தூதுவராக (1971-73) விளங்கினார். இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில் சால்வடார் அயண்டே படுகொலை செய்யப்பட்ட சில நாள்களில் நெரூடாவும் மறைந்தார். அவருடைய வீடும் உடைமைகளும் கையெழுத்துப்படிகளும் சூறையாடப்பட்டன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூட மேலும்