Your cart is empty.
பாமா
பிறப்பு: 1958
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வ. புதுப்பட்டி. அப்பா இரா. சூசைராஜ். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அம்மா செபஸ்தியம்மா கூலி வேலை செய்தார். ஆரம்பக் கல்வி புதுப்பட்டியில். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மதுரையில் ஆசிரியர் பயிற்சிபெற்று பத்து ஆண்டுகள் பள்ளிகளில் பணியாற்றினார். பின்னர் துறவற மடத்தில் ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தார். 1992இல் துறவற மடத்தைவிட்டு வெளியேறி ‘கருக்கு’ நாவலை எழுதினார். கிராஸ்வேர்ட் விருதும் (2000) அமுதன் அடிகள் இலக்கியப் பரிசும் (2003) பெற்றுள்ளார். பாரிஸ் புத்தகத் திருவிழா (2002) சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழா (2005), வாஷிங்டன் மேக்ஸிமம் இந்தியா விழா (2011) முதலிய பண்பாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.