Your cart is empty.
பெஞ்சமின் சூல்ட்சே
பிறப்பு: 1689
ஜெர்மனியின் சோன்னன்புர்க் நகரில் பிறந்தார். ஜெர்மனியின் ஹாலே ஃப்ராங்கெ கல்வி நிறுவனத்தின் சார்பில் தரங்கம்பாடிக்கு அனுப்பப்பட்டவர். ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் இணைந்த வகையிலான சீர்திருத்தக் கிறுத்தவப் பணிகளை முன்னெடுத்தவர். ஜெர்மன் மொழி மட்டுமன்றி, லத்தின், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹீப்ரூ, இந்தி ஆகிய மொழிகளையும் ஆழமாக அறிந்தவர். 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழ்நாட்டிற்குச் சீர்திருத்தக் கிறுத்தவத் திருச்சபையில் பணியாற்றவந்த சமயப்பணியாளர்களில் தமிழ் மொழியில் மிக அதிகமான மொழிபெயர்ப்புக்களைச் செய்தவர்; மெட்ராஸ் திருச்சபையைத் தொடக்கியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மெட்ராஸ் 1726
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும்