பூமா ஈஸ்வரமூர்த்தி (பி. 1952)
திருநெல்வேலியில் பிறந்த இவர் பதினைந்து வருடமாக சென்னையை வாழ்விடமாகக் கொண்டிருக்கிறார். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கிப் பணியிலிருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார்.
எழுபதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கி எண்பதுகளில் பரவலாக அறியப்பெற்றார். கவிதை உலகில் மிக நிதானமாக காலடிகளை முன்னெடுத்து வைக்கும் இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு இது.
கவிதை தவிர சிறுகதை, கட்டுரை, விமர்சனம், சுற்றுச்சூழல் எனப் பல ஈடுபாடுகள் கொண்டவர்.