Your cart is empty.
சி.என். அண்ணாதுரை
பிறப்பு: 1909 - 1969
சி.என். அண்ணாதுரை (15.09.1909 – 02.02.1969) அண்ணா இருபதாம் நூற்றாண்டுத் தமிழக அரசியலில் முக்கியமான தலைவர். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர். பத்திரிகை, இலக்கியம், நாடகம், திரைப்படம் எனப் பல தளங்களில் செயல்பட்டவர். கம்ப ரசம், ஆரியமாயை, தீ பரவட்டும் உள்ளிட்ட முக்கியமான நூல்கள் பலவற்றின் ஆசிரியர். தமிழக மக்களின் மனம் கவர்ந்த மேடைப் பேச்சாளர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் முதலிய பதவிகளை வகித்துப் பின்னர் 1967இல் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர். சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு என அதிகாரப் பூர்வமாகப் பெயரிட்டவர். அறிஞர், பேரறிஞர் ஆகியவை இவருக்கு அடைமொழியாக வழங்கி வருகின்றன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தீட்டுத்துணி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி வெள மேலும்