Your cart is empty.
சிட்டி
பிறப்பு: 1910 - 2006
பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி) (1910 - 2006) சிட்டி என்கிற பெ.கோ. சுந்தரராஜன் 1930களிலிருந்து சிறுகதை, கவிதை, விமர்சனக் கட்டுரைகள், வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல் தரும் ‘அரங்கம்’ என்ற அமைப்பை நடத்தினார். ‘அந்தி மந்தாரை’, ‘தாழை பூத்தது’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். இவர் கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதிய ‘கண்ணன் என் கவி’, பெ.சு. மணியுடன் இணைந்து எழுதிய ‘அதிசயப் பிறவி வ.ரா. வரலாறு’, சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து எழுதிய ‘தமிழ் நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ போன்ற நூல்கள் முக்கியமானவை. ‘மணிக்கொடி’ எழுத்துச் சங்கிலியின் கடைசிக் கண்ணியான சிட்டி 97ஆம் வயதில் காலமானார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நடந்தாய் வாழி காவேரி
காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கிய மேலும்