Your cart is empty.
தாக் ஸூல்ஸ்தாத்
பிறப்பு: 1941
தாக் ஸூல்ஸ்தாத் (பி. 1941) நார்வே நாட்டின் முதன்மையான எழுத்தாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக மிக உயர்ந்த தரத்தில் வசீகரமான மொழி நடையோடு நாவல்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள் என முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஸூல்ஸ்தாத்தின் அரசியல் பார்வை காலம்தோறும் மாறி வந்திருப்பதை அவரது நாவல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின்பால் ஆரம்பத்தில் அவர் கொண்டிருந்த மனச்சாய்வு காலப்போக்கில் மெதுவாக மாற்றமடைந்து வந்திருக்கிறது. இவரது நாவல்களில் உச்சம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நாவல் ‘உடைந்த குடை’ (Shyness and Dignity). பெருமை மிக்க Nordic Council’s Literature Prizeஐ மூன்றுமுறை பெற்ற ஒரே எழுத்தாளர் தாக் ஸூல்ஸ்தாத்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
உடைந்த குடை
உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் மேலும்