Your cart is empty.
தயாபாய்
பிறப்பு: 1941
தயாபாய் (பி. 1941) கேரள மாநிலம், பாலாவில் பூவரணி என்னும் சிறு கிராமத்தில் 1941ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் மேர்சி மாத்யூ. கொச்சுகொட்டாரம் துவக்கப் பள்ளி, விளக்குமாடம் செயின்ட் ஜோசப்ஸ் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கல்வி. 1958இல் பீகார் மாநிலம், ஹஸாரிபாக்கில் ஒரு கிருஸ்தவ மடாலயத்தில் கன்னியாஸ்திரி பயிற்சிக்காக சேர்ந்த போதிலும், பயிற்சி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 1965இல் மடாலயத்திலிருந்து வெளியேறி, பீகார் மாநிலம், பலாமோ மாவட்டத்திலுள்ள பழங்குடியினப் பகுதியான மஹோடாவில் கல்விப்பணி புரிந்தார். பி.எஸ்.ஸி., எம்.எஸ்.டபிள்யூ., எல்.எல்.பி. பட்டங்கள் பெற்றவர். பம்பாய் சேரிப்பகுதி சேவை, வங்கதேச போருக்குப்பிந்திய மீட்பு நடவடிக்கைகள், போபால் விஷவாயுக் கசிவு, ஆந்திர மாநில புயல்சேதம், ஹரியானா வெள்ளப்பெருக்கு போன்ற துயர சம்பவங்களில் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். 1981 முதல் 1995 வரையிலான நீண்ட 14 வருடங்கள், தின்ஸை பழங்குடி கிராமத்தில் கோண்டு பழங்குடிகளுடனேயே தங்கி அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடியவர். 1995இலிருந்து பரூல் கிராமத்தில் இயற்கை விவசாயம், நீர்பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி பசுமைப் போராளியாக வாழ்ந்து வருகிறார். 2007இல் மலையாள மனோரமாவின் ‘வனிதா வுமன் ஆஃப் தி இயர்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். வில்ஸன் ஐசக் கேரள மாநிலம் மூவாற்றுப்புழையில் பிறந்தவர். ‘ஐனநாயகத்தில் போலீஸ்’ என்பது இவர் எழுதிய ஆய்வுநூல். கேரள போலீஸ் அசோஷியேஷன் நடத்திய ‘காவல் கைரளி’ கதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர். எர்ணாகுளம் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பச்சை விரல்
கேரளாவின் பாலா கிராமத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு மகளாகப் பிறந்த மேர்சி மாத்யூ என்னும் மேலும்