Your cart is empty.
தேவகாந்தன்
பிறப்பு: 1947
தேவகாந்தன் (பி. 1947) இலங்கையின் வடமாகாணம் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், தனது பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பை டிறிபேக் கல்லூரியில் முடித்ததும் 1968இல் இணைந்து பணியாற்றிய இடம் ஈழநாடு தேசிய நாளிதழின் ஆசிரியர் குழு. 1974வரை அந்நிறுவனத்தில் கடமையாற்றிய பின் இலங்கை யுத்த நிலைமை காரணமாகத் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்தல் 1984இல் நிகழ்கிறது. இடையிட்ட சில ஆண்டுகளைத் தவிர 2003இல் இலங்கைக்குத் திரும்பும்வரை தமிழ்நாட்டில் தங்கியிருந்த நீண்டகாலத்தில் இலக்கு சிற்றிதழை நடத்தியதோடு ‘கனவுச்சிறை’ மகாநாவல் உட்பட ஐந்து நாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிடுதல் சாத்தியப்பட்டது. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை நாவல் பரிசு (1998), திருப்பூர் தமிழ்ச் சங்கம் (1996), லில்லி தேவசிகாமணி (1996), தமிழர் தகவல் (2013) உட்பட பல்வேறு இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளுள் வாசக, விமர்சன கவனம் மிகவும் பெற்றவையாக ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ ஆகிய நாவல்களைச் சொல்ல முடியும். மனைவி இரண்டு மகள்களுடன் தற்பொழுது கனடா ரொறன்ரோவில் வசித்துவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம்
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய மேலும்
கனவுச்சிறை
கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றி மேலும்
கலாபன் கதை
கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் மேலும்
கந்தில் பாவை
1880-2015 க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை மேலும்