Your cart is empty.
தரம்பால்
பிறப்பு: 1922 - 2006
தரம்பால் (1922 - 2006) லாகூரில் பிறந்தார். எட்டாம் வயதில் காந்தியால் ஈர்க்கப்பட்டு 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றுச் சிறை சென்றார். கமலாதேவி சட்டோபாத்யாயா, ராம் மனோகர் லோகியா, ஜெயப் பிரகாஷ் நாராயண் ஆகியோருடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார். 1950இல் பாபுகிராம் கூட்டுச்சமுதாய அமைப்பு, 58 முதல் சேவாகிராம்; பின்னர் சென்னை ஆகிய இடங்களில் வாழ்ந்தார். மதராஸ் பஞ்சாயத்து அமைப்பு, இந்திய அரசியல் சட்டத்தின் ஆக்கம், 18, 19 நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆட்சி விவரங்கள் முதலான ஆவணங்களைத் தொகுத்து எழுதினார். 1980 முதல் சென்னையில் PPST அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் Centre for Policy Studies அமைப்பை உருவாக்க உந்து சக்தியாக இருந்தார். தரம்பால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிலிஸை மணந்துகொண்டார். 1986இல் மனைவி காலமானார். சேவாகிராமத்திலேயே வசித்த தரம்பால் 2006இல் காலமானார். ஆசிரம மரபுப்படி அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. தரம்பாலின் மூத்த மகள் ஜெர்மனியிலும் மகன் மற்றும் இளைய மகள் லண்டனிலும் வசிக்கிறார்கள்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காந்தியை அறிதல்
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் இந்தியாவின் சிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான த மேலும்