Your cart is empty.
டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர்
பிறப்பு: 1933
டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் பிரபல மனநோய் மருத்துவர் டாக்டர் பி.எம். மாத்யூ, கேரளத்தில் மாவேலிக்கரையை அடுத்த கரிப்புழா பாலைக்கல் தாழே வீட்டில் 1933 ஜனவரி 31ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை பி.எம். மத்தாயி; தாய் குஞ்ஞம்மா. திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியிலிருந்து இன்டர்மீடியட் தேர்வு பெற்ற பின்னர் ஆலுவா யூ.சி. கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். ‘பாலியல் குறைபாடுள்ளவர்களின் ஆளுமைத்தன்மை’ என்பதே இவரது முனைவர் பட்டத்துக்கான ஆய்வு. பெங்களூரை மையமாகக் கொண்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ் (NIMHANS) நிறுவனத்தில் சிகிச்சை உளவியல் பட்டமும் பெற்றார் (1963). வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் உளநோய்ப் பிரிவில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகவும், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராகவும் 1970வரை பணியாற்றினார். கேரள அரசின் பொதுக் கலைக்களஞ்சியத்தின் உளவியல் பிரிவின் துணை ஆசிரியராக ஐந்து வருடங்கள் பணியாற்றினார். 1975 முதல் திருவனந்தபுரத்திலுள்ள உளவியல் சிகிச்சை மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் செயலாற்றி வருகிறார். ‘மனசாஸ்திரம்’, ‘குடும்ப வாழ்க்கை’ முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். நவீன ஊடகங்களில் உளவியல் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘மலையாள மனோரமா’ வார இதழில் இவரது ‘உளவியல் அறிஞரின் பதில்’ என்ற பகுதி இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. விறுவிறுப்பான நடையில் எழுதும் டாக்டர் மாத்யூ சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் சிறந்த பேச்சாளர், நடிகர். சிற்பக்கலை, கார்ட்டூன் முதலியவற்றிலும் திறமை படைத்தவர். இவரது முக்கியப் படைப்புகள்: ‘அப்பா நான் எங்கிருந்து வருகிறேன்’, ‘இளவயதினரின் வாழ்க்கைப் பிரச்சினைகள்’, ‘குடும்ப வாழ்க்கை’, ‘இளமை’, ‘குமரப்பருவம்’, ‘காளைப்பருவம்’, ‘முதுமை’, ‘அப்பா சிறுவனாயிருந்தபோது’. இந்நூல்கள் மலையாள மொழியில் பாலியல் ஆய்வுப்பிரிவில் போற்றப்படுபவையாகும். மேலும் ‘உங்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள்’, ‘விடுபடும் முடிச்சுகள்’, ‘உளவியல் பிரச்சினைகள்’, ‘எவ்வாறு படிக்கவேண்டும், தேர்வு எழுதவேண்டும், ராங்க் பெற’, ‘இல்வாழ்க்கை-தொடர்பு-பிணைப்பு’ போன்றவை இவரது பிற நூல்கள். உளவியல் சிகிச்சையில் (சைக்கோதெரபி) 46 வருடங்கள் அனுபவமுள்ள டாக்டர் பி.எம். மாத்யூ, இன்று கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவர். திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் வசித்து வருகிறார். மனைவி: சூசி மாத்யூ. மக்கள்: டாக்டர் சஜ்ஜன், டாக்டர் ரேபா, லோலா. முகவரி: Dr. P. M. Mathew Vellore Psycho Therapic Centre Charachira, Kaudiyar P.O. Thiruvananthapuram 695 003 Phone : 2316433, 2310478
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பாலியல் கலைக்களஞ்சியம்
இது ஒரு பாலியல் கல்வி நூல். கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ மேலும்