Your cart is empty.
இரா. சின்னசாமி
பிறப்பு: 1963
கோவை மாவட்டத்தில் சிறுவாணி அடிவாரம், புள்ளாக்கவுண்டன் புதூர் என்ற ஊரில் அகவை முதிர்ந்த தமிழறிஞர். பொ. வெற்றிவேலன்-இராசம்மாள் தம்பதியருக்குத் தலைமகனாகப் பிறந்த இரா. சின்னசாமி, புவியியல் மற்றும் சட்டவியலில் இளங்கலைப் பட்டங்களும், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியலில் முதுகலைப்பட்டங்களும், பெற்றவர். தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக “தமிழகத்தில் சாதிப்பூசல்கள் 1980-2005: ஒரு சமூகப் பகுப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு அது தற்போது நிறைவுறும் தறுவாயில் உள்ளது.
காவல் துணைக் கண்காணிப்பாளராக 1998இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். தற்போது மணிமுத்தாறு, த.சி.கா 12ஆம் அணியின் தளவாயாகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது கவிதைகள் பல சிற்றிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
மனைவி: சி. சாரதாமணி
மகன்கள்: சி. ரவி பாரதி, சி. ஆதித்யன்
மின்னஞ்சல் : erachinnaswamy@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
எழிலைக் கிழங்கின் மாமிசம்
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். க மேலும்