Your cart is empty.
இரட்டைமலை ஆர். சீனிவாசன்
பிறப்பு: 1860 - 1945
இரட்டைமலை ஆர். சீனிவாசன் (1860-1945) செங்கல்பட்டு அருகேயுள்ள கோழியாளம் கிராமத்தில் பிறந்து கோயம்புத்தூரில் படிப்பை முடித்த இரட்டைமலை சீனிவாசன் தமிழக முன்னோடி தலித் தலைவர். 1892ஆம் ஆண்டு பறையர் மகாஜன சபை என்கிற அமைப்பை நிறுவிய அவர் 1893ஆம் ஆண்டு பறையன் என்னும் வார இதழைத் தொடங்கி ஏழாண்டுகள் நடத்தினார். 1923 முதல் 1938 வரை சென்னை மாகாணச் சட்ட மேலவை உறுப்பினராக இருந்து ஒடுக்கப்பட்டோர் நோக்கில் பல்வேறு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அம்பேத்கரோடு இணைந்து, லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு பூனா ஒப்பந்தத்தில் (1932) தாழ்த்தப்பட்டோர் சார்பில் ஒருவராகக் கையெழுத்திட்டார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஜீவிய சரித்திர சுருக்கம்
தமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவரான இரட்டைமலை சீனிவாசன் (1860-1945) எழுத மேலும்