எரிக் ஃபிராம் (1900 – 1980)
எரிக் ஃபிராம் ஜெர்மனியில் பிறந்த உளப்பகுப்பாய்வாளர், சமூகத் தத்துவஞானி, நூலாசிரியர். இவர் 1900ஆம் ஆண்டு ஃபிராங்ஃபர்ட்டில் பிறந்தார். ஹெய்டல்பர்க், ஃபிராங்ஃபர்ட், மூனிச் பல்கலைக்கழகங்களில் சமூகவியலும் உளவியலும் கற்றார். பெர்லின் உளப்பகுப்பாய்வு நிறுவனத்தில் உளப்பகுப்பாய்வில் பயிற்சி பெற்றார். 1925ஆம் ஆண்டு முதல் ஃபிராம், உளவியல் ஆலோசகராகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்; கோட்பாட்டாய்வில் ஈடுபட்டார்.
பின்னர் ஓர் அமெரிக்கக் குடிமகனாக எரிக் ஃபிராம் கொலம்பியா பல்கலைகழகம், பின்னிங் கல்லூரி, உளச் சிகிச்சைக்குரிய வில்லியம் அலன்ஸன் ஒய்ட் நிறுவனம், சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளி, சிகாகோ தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.