Your cart is empty.
இரோம் ஷர்மிலா
பிறப்பு: 1972
இரோம் ஷர்மிலா (1972) கடந்த பத்து ஆண்டுகளாக, நவம்பர் 4, 2000 முதல், ஷர்மிலா மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கலவரப் பகுதிகள் என்று கருதப்படும் பகுதிகளிலும், அரசியல் ரீதியாகச் சற்றுக் கவனமாக நோக்கவேண்டிய பகுதிகளிலும் இந்தியப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958 மூலம் தரப்பட்டுள்ளது. இதை அகற்றிவிட வேண்டும் என்பதுதான் ஷர்மிலாவின் கோரிக்கை. இந்தச் சட்டம் இந்தியப் படைகளுக்கு இயங்குவதற்கான கட்டுப்பாடு இல்லாத முழுச் சுதந்திரத்தை இந்தப் பகுதிகளில் தருவதால் இது ஒரு கொடுமையான சட்டமாகக் கருதப்படுகிறது. தற்கொலை முயற்சிக்காகக் கைது செய்யப்பட்டு பனிரெண்டு மாதங்களுக்கொருமுறை விடுவிக்கப் பட்டு மீண்டும் கைது செய்யப்படும் ஷர்மிலாவை உயிருடன் வைத்திருக்க அவர் மூக்கில் புகுத்தப்பட்ட குழாய் மூலம் வற்புறுத்தி அவர் உணவூட்டப்படுகிறார். அவர் பகுதியில் அமைதி நிலவ அவர் செய்யும் இந்த வித்தியாசமான போராட்டம் வட கிழக்குப் பகுதிகளில் இதே லட்சியத்துடன் போராடிவரும் பலருக்கு ஒரு சக்திவாய்ந்த சின்னமாகிவிட்டது. இந்த இயக்கத்துக்காக அவளே செய்த தேர்வின்படி போராடி வரும் ஷர்மிலாவுக்கு இளம் வயதுப் பெண்கள் விரும்பிப் போற்றும் சில விஷயங்களுக்கான ஏக்கங்கள் உண்டு: காதல், சுதந்திரம், “சுதந்திரமான” வாழ்க்கையை வாழும் இயல்பான மகிழ்ச்சி, வெகு சாதாரணமான விஷயங்களான நீர் பருகும் அனுபவம், பல்லைத் தேய்க்கும் சுகம் இவற்றுக்கான ஏக்கம். மைதைலான் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதிலுள்ள பனிரெண்டு கவிதைகள், தனியாகப் போராடும் ஒரு பெண்ணின் வலியுடன் கூடிய ஊமைக்காயங்களைச் சொல்பவை.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அமைதியின் நறுமணம்
இந்தியப் படைகளுக்கு மணிப்பூரிலும் வேறு சில பகுதிகளிலும் 1958 AFSPA சட்டப்படி சிறப்பு அதிகாரங்கள் மேலும்