Your cart is empty.
இவால்ட் ஃப்ளிஸர்
பிறப்பு: 1945
இவால்ட் ஃப்ளிஸர் (பி. 1945)
ஸ்லோவேனியாவின் சமகால இலக்கியத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர். கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். இவரது படைப்புகள் முப்பத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எண்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள ஃப்ளிஸர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நிலத்தடி ரயில் ஓட்டுநராகப் பணிபுரிந்திருக்கிறார். ஸ்லோவேனியாவின் மிகப் பழமையான இலக்கிய ஏடான Sodobnost இன் ஆசிரியராக இருக்கும் இவர் அந்நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான Preseren Foundation Prizeஐப் பெற்றவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மந்திரவாதியின் சீடன்
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது மேலும்