Your cart is empty.
பதீக்
பிறப்பு: 1987
பதீக் (பி. 1987) இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். சூபிக் கவிதைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலும் தனது எழுத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் (www asareeri.com). சில கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. 2012இல் ‘இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்’ எனும் முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. லண்டனில் தனது பட்டப் பின் படிப்பை முடித்துவிட்டு, தற்போது இலங்கையில், வணிக மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையில் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: asareeri@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பனி சொல் அல்லது தவம்
புதிய கவிஞர் பதீக்கின் கவிதைகளிடையே ஆங்காங்கு மிளிரும் பாரதியினதும் பாரசீகக் கவிஞர்களதும் எதிரொலி மேலும்