Your cart is empty.
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ
பிறப்பு: 1942
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ என் பெயர் ஃபெர்னான்டோ ஸோரன்டினோ. இந்தக் குறிப்பை நான் எழுதுவதற்குக் காரணம் இதன் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்ள முடியும் என்பதால்தான். நான் ப்யூனஸ் அயரஸில் (அர்ஜென்டினா) 1942 நவம்பர் 8ஆம் தேதி பிறந்தேன். எனது கதைகளில் அதீத கற்பனையும் ஹாஸ்யமும் கலந் திருப்பதாகச் சொல்கிறார்கள். சிலசமயம் சற்று விகாரமாக இருந்தாலும் உண்மையின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். எழுதுவதைவிட படிப்பதில்தான் எனக்கு விருப்பம். உண்மையில் நான் அதிகம் எழுதுவதும் இல்லை. முப்பத்திரண்டு ஆண்டு எழுத்து வாழ்க்கையில் நான் ஸ்பானிஷ் மொழியில் எழுதியவற்றின் பட்டியல் மிகச் சிறிதாகவே இருக்கும் - ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஒரு நீண்ட கதை, ஒரு குறுநாவல் - அவ்வளவுதான் எனது படைப்புக்கள். சிறுவர்களுக்காக இரண்டு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். அத்துடன் ஜார்ஜ் லூயி போர்கஸ் (1974), அடேல்போ பியாய் காஸாஸ் (1992) இருவரையும் பேட்டி கண்டு எழுதிய இரண்டு புத்தகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அர்ஜென்டைன் இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். மற்ற பலரைப் போலவே எனக்கும் கணிசமான எண்ணிக்கையில் இலக்கியப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஸ்பானிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னுடைய கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை எனது கதைகள் ஆங்கிலம், போர்த்துக்கீஸ், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்ச், பின்னிஷ், ஹங்கேரியன், போலிஷ், வியட்நாமீஸ் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது தமிழிலும் வெளிவருகிறது. சுருக்கமாகச் சொன்னால், நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
ஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டைனாவில் பியூனஸ் அயர்ஸ மேலும்