பிரான்சுவாஸ் சகன் (1935 - 2004)
‘அழகான ராட்சஷி’யென (le Charment monstre) சக படைப்பாளிகளால் பிரியமாக அழைக்கப்பட்ட பிரான்சுவாஸ் சகன், இலக்கிய உலகில் கால் பதித்தபோது பதினெட்டு வயது. வயது கேற்பத் துருதுருப்பும் உற்சாகமும் எழுத்திலும் வெளிப்பட்டது. உணர்ச்சிபூர்வமான நடையில் பாசாங்கற்ற சொற்களூடாக மன உள்ளோட்டங்களை அழகாய் வெளிப்படுத்திய பிரான்சுவாஸ் சகன் சமகால பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். பிரெஞ்சு தேச இலக்கியவெளியில் ‘புதிய அலை’ இயக்கத்தை முன்னெடுத்தவர்.