Your cart is empty.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஸ்பானிய மொழி நவீன இலக்கியத்துக்கு வழங்கிய கலைக் கொடை கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் பார்வையிலும் புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. அவரது வருகைக்குப் பின்பு அவரின் எழுத்து வகையால் தூண்டுதல் பெறாத இலக்கியப் போக்கும் பாதிக்கப்படாத எழுத்தாளர்களும் எந்த மொழியிலும் இல்லை. அவரது மாய எதார்த்தத்தால் வசீகரிக்கப்படாத இலக்கிய வாசகரும் எந்த மொழியிலும் எந்தப் பிரதேசத்திலும் இல்லை. அவரைவிட ஆழமான எழுத்தாளர்களும் அவரைவிட சுவாரசியமான கதைசொல்லிகளும் இருக்கலாம். ஆனால் இலக்கியச் செறிவையும் வெகுவான வாசகப் பரப்பையும் ஒரே சமயத்தில் வசப்படுத்திக் கொண்டதில் மார்க்கேஸுக்கு நிகரானவர்கள் இல்லை. ஷேக்ஸ்பியர், தால்ஸ்தோய், செர்வாண்டிஸ், விக்டர் ஹியூகோ ஆகியோரின் வரிசையில் நவீன உலகம் கண்ட பெருங்கலைஞர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.