Your cart is empty.

கணேஷ் வெங்கட்ராமன்
பிறப்பு: 1969
கணேஷ் வெங்கட்ராமன் (பி. 1969) லால்குடியில் பிறந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பள்ளிப் படிப்பு; இளநிலை வணிகவியல் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடி வடக்குக்கு இடப்பெயர்வு. குஜராத், மகாராஷ்டிரம், சில அயல் நாடுகள் என்று பல இடங்களில் பல நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடந்த ஏழு வருடங்களாக ஒரு பன்னாட்டு உணவு நிறுவனத்தில் விற்பனைப் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 2011இலிருந்து வலைதளத்திலும் இணையப் பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். பௌத்தம், வரலாற்று நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். இவரது சிறுகதைத் தொகுப்பு ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோவில்’ (2016). மனைவி: ஹேமா; புதல்விகள்: பூஜா, ஷ்வேதா ஆகியோருடன் தில்லியில் வசிக்கிறார். மின்னஞ்சல்: hemgan@gmail.com