Your cart is empty.
கௌரி லங்கேஷ்
பிறப்பு: 1962
கௌரி லங்கேஷ் (1962 - 2017)
கௌரி லங்கேஷ் பத்திரிகேயின் ஆசிரியர். ஆங்கில அச்சு ஊடகங்களில் இதழாளராகப் பணியைத் தொடங்கி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, சண்டே இதழ்களில் பணியாற்றினார். 1990களில் புது தில்லியில் ஈடிவி செய்தித் தொலைக்காட்சியில் செய்திப் பிரிவின் தலைவராக இருந்தார். இரண்டாயிரத்தில் அவரது தந்தை பி. லங்கேஷ் மறைந்த பிறகு, லங்கேஷ் பத்திரிகே செய்தி வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 2003ஆம் ஆண்டில் கர்நாடகச் சமூக நல்லிணக்க அமைப்பில் சேர்ந்த பிறகு, கர்நாடகச் சமூக இயக்கங்களில் முக்கியமானவராக உருவானார். சிக்மகளூர் மாவட்டத்தில் பழமைவாய்ந்த பாபாபுடன்கிரி தர்காவைக் கைப்பற்றுவதற்காகச் சங்கப் பரிவாரங்கள் மேற்கொண்ட பிரசாரங்களை எதிர்த்துக் கர்நாடக சமூக நல்லிணக்க அமைப்பு போராடியது. நீதி, சமத்துவம், அன்பு ஆகியவற்றுக்கான போராட்டங்களில் பத்திரிகையாளராகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் முன்னணியில் இருந்தார். 2017 செப்டம்பர் 5ஆம் தேதி வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கௌரி லங்கேஷ்
கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உரு மேலும்