Your cart is empty.
கீதா ராமசாமி
பிறப்பு: 1920
தெலங்கானா மார்க்சிய லெனினிய இயக்கத்தின் முன்னாள் போராளி. 1975இல் நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் தன் கணவர் சிரில் ரெட்டியுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் டெல்லிக்கு அருகில் இருக்கும் காசியாபாத்தில் தலித் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். 1984முதல் அடுத்த பத்து ஆண்டுகள் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள தலித் மக்களிடையே பணியாற்றி, கொத்தடிமைத் தொழில்முறையை ஒழிக்கவும், நிலமற்ற ஏழைகளுக்கு நில உரிமைகளைப் பெற்றுத் தரவும் போராடியவர்.
‘ஹைதராபாத் புக் டிரஸ்ட்’ பதிப்பகப் பணிகளுக்காக அறியப்பட்டவர். 1980ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை சுமார் நானூற்றுக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்களை இப்பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அலெக்ஸ் ஹேலிமுதல் மகாசுவேதா தேவிவரை உலகம் முழுவதிலுமிருந்து படைப்புகளை மொழிபெயர்த்து, குறைந்த விலையில் பதிப்பித்துத் தரும் முறையை ‘ஹெச்.பி.டி.’தான் தொடங்கி வைத்தது.
‘ஜீனா ஹை தோ மர்னா சீக்கோ: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் ஜார்ஜ் ரெட்டி’ 2016, ‘இந்தியா ஸ்டிங்க்கிங்: மேனுவல் ஸ்கேவெஞ்சர்ஸ் இன் ஆந்திர பிரதேஷ் அண்ட் தெயர் வொர்க்’, 2005, உள்ளிட்ட பல ஆங்கிலப் புத்தகங்களைக் கீதா எழுதியிருக்கிறார். தெவுலபள்ளி கிருஷ்ணமூர்த்தியின், ‘லைஃப் இன் அனந்தரம்’ உள்ளிட்ட பல தெலுங்குப் படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். பி. அனுராதாவின், ‘ப்ரிஸன் நோட்ஸ் ஆஃப் எ வுமன் ஆக்ட்டிவிஸ்ட்’ போன்ற புத்தகங்களின் தொகுப்பாசிரியர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நிலம் துப்பாக்கி சாதி பெண்
1980களில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் இப்ராகிம்பட்டினத்தில் நிலமற்ற தலித் மக்கள் கடுமையான மேலும்