Your cart is empty.
கிரீஷ் கார்னாட்
பிறப்பு: 1938 - 2019
கிரீஷ் கார்னாட் (1938 - 2019) ஐம்பதாண்டுகளுக்கும் அதிகமாக நவீன கன்னட நாடக உலகில் ஊக்கத்துடன் இயங்கிவந்த ஆளுமை கிரீஷ் கார்னாட். வரலாறு, தொன்மம், சமூகம் எனப் பல்வேறு பின்னணிகள் சார்ந்து கன்னட மொழியில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகப்பிரதிகளை உருவாக்கியவர். அவை தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காளம் எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் மிக முக்கியமான நாடக இயக்குநர்களான இப்ராஹிம் அல்காசி, பி.வி. காரந்த், பிரசன்னா, அரவிந்த கௌர், விஜய் மேத்தா, சியாமானந்த ஜலன், ஜாபர் மொகிதீன் போன்றவர்களால் கிரீஷ் கார்னாட்டின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இந்தியாவின் முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருது 1998ஆம் ஆண்டில் கிரீஷ் கார்னாட்டுக்கு வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றவர். தனித்துவம் வாய்ந்த தன் திறமையால் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் கிரீஷ் கார்னாட் நாடறிந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்குகிறார். இவர் 10.06.2019 அன்று இயற்கை எய்தினார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அஞ்சும் மல்லிகை
-அயல்தேச பயணம் என்னும் புதுமை நமது நாட்டில் கடந்த காலத்தில் புறத்தே பெருமைக்குறியதாகவும் அகத்தே அ மேலும்
திருமண ஆல்பம்
சூதாட்டத்துக்குரிய தந்திரங்களோடும் பேராசைகளோடும் நிகழும் திருமணங்கள் ஏராளம். இரு உள்ளங்கள் இணைந்த மேலும்
அனலில் வேகும் நகரம்
நகரத்தில் வாழும் வளமான குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் ஏழ்மைமிக்க குடும்பங்களின் வாழ்க்கைமுறைமை மேலும்
சிதைந்த பிம்பம்
பேரும் பெருமையும் மனிதர்களின் ஆள்மனத்தில் உறங்கும் விருப்பங்கள். ஒரு சிலர் அவற்றை நேர்மையான உழைப் மேலும்
அஞ்சும் மல்லிகை
அயல்தேச பயணம் என்னும் புதுமை நமது நாட்டில் கடந்த காலத்தில் புறத்தே பெருமைக்குறியதாகவும் அகத்தே அச மேலும்