Your cart is empty.
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
பிறப்பு: 1925
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925 - 2012) குமரிமாவட்டம் புலிப்புனத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை பர்மாவிலும் தமிழகத்திலும் மேற்கொண்டார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கணவர் பேராசிரியர் ஜேசுதாசனின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபட்டார். ‘புத்தம் வீடு’, ‘மா - னி’, ‘டாக்டர் செல்லப்பா’, ‘அனாதை’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். ‘தமிழர் - தமிழிலக்கியம் வாயிலாக’ என்ற நூல்வரிசையைக் கணவருடன் இணைந்து உருவாக்கினார். திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 2012ஆம் ஆண்டு காலமானார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புத்தம் வீடு
‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங் மேலும்