Your cart is empty.
ஐ. ஜோப் தாமஸ்
பிறப்பு: 1939
திருநெல்வேலி மாவட்டம் நாசரேத்தில் பிறந்த ஐசக் ஜோப் தாமஸ், பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியிலும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றார். சென்னை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய போது இந்தியக் கலை வரலாறு இவரை ஈர்க்க ஆரம்பித்தது. 1972இல் ஃபுல் பிரைட் நல்கை பெற்று அமெரிக்கா சென்றார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, டேவிட்சன் கல்லூரியில் தென்னாசியத்துறையில் கலை வரலாறு போதிக்க ஆரம்பித்தார். இவரது முதல் நூலான ‘Tiruvalangadu Bronzes’ 1985இலும் ‘Paintings in Tamil Nadu’ 2010இலும் ‘தமிழக ஓவியங்கள்: ஒரு வரலாறு’ 2014இலும் வெளியாயின. ஜோப் தாமஸ், வடகரோலினா மாநிலத்தில் கொர்னீலியஸ் கிராமத்தில் வசிக்கின்றார்.