Your cart is empty.
ஜெ. பாலசுப்பிரமணியம்
பிறப்பு: 1978
ஜெ. பாலசுப்பிரமணியம் (பி. 1978) தமிழ் இதழியல் வரலாறு இடைவெளிகள் நிரம்பிய ஆய்வுப் பரப்பு. தமிழின் முக்கிய இதழ்கள் பல முற்றிலுமே கிடைக்காத நிலை இவ்வரலாற்றை எழுதுவதற்குப் பெரிய தடைக்கல் ஆகும். ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை’ முறையான ஆய்வு நெறியைக் கைக்கொண்டு, கூரிய அரசியல் பார்வையுடன் ஒரு முக்கால் நூற்றாண்டுக் கால தலித் இதழியல் வரலாற்றைத் திறம்பட மீட்டுருவாக்கம் செய்கிறது. நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே இன்று கிடைக்கும் நிலையில், நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் இதழ்களைப் பற்றிக் காலனிய அரசாங்க ஆவணங்களிலிருந்து ஏராளமான செய்திகளைத் திரட்டி, அவற்றைப் பகுத்தாராய்ந்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம். 19ஆம் நூற்றாண்டில் நவீனத்துவம் முகிழ்ந்த தருணத்திலேயே தலித்துகளிடையே வளமானதொரு அறிவுச் சூழல் நிலவியதையும் நிறுவிக்காட்டுகிறார். தலித் வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச் சிந்தனை வரலாற்றுக்குமேகூட இந்நூல் சீரிய பங்களிப்பாகும். இதனை அடியொற்றித் தமிழ் இதழியல் வரலாறு விரிவாக எழுதப்படும் நற்காலத்தை எதிர்நோக்குவோம். ஜெ. பாலசுப்பிரமணியம் (பி. 1978) திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தில் பிறந்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தலித் வரலாறு, அரசியல் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை
தமிழ் இதழியல் வரலாறு இடைவெளிகள் நிரம்பிய ஆய்வுப் பரப்பு. தமிழின் முக்கிய இதாகள் பல முற்றிலுமே கிட மேலும்