Your cart is empty.
ஜேம்ஸ் ஸ்டீஃபென்ஸ்
பிறப்பு: 1880 - 1950
ஜேம்ஸ் ஸ்டீஃபென்ஸ் (1880 – 1950) ஜேம்ஸ் ஸ்டீஃபென்ஸ் ஐரிஷ் நாவலாசிரியர், கவிஞர். ஜேம்ஸ் சற்றே குள்ளம். எனினும் பல குத்துச் சண்டைகளில் வென்று பரிசுகள் வாங்கியிருக்கிறார். இராணுவ வீரர்கள் பற்றி நிறைய படித்து ஒரு படைவீரனாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது உயரம் அதற்குத் தடையாக இருந்தது. சோஷலிசத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஐரிஷ் ரிபப்ளிக்கன் கட்சியில் சேர்ந்து தீவிரமாக உழைத்தார். ஐரிஷ் நேஷனல் கேலரியில் ஒரு பதிவாளராக 1915 முதல் 1925வரை பணிபுரிந்தார். ஐரிஷ் தேவதைக் கதைகளைத் தழுவிய பல நாவல்கள் எழுதினார். ‘டப்ளின் எழுச்சி’ நூலில் அவருடைய நண்பர் தாமஸ் மெக்தொனால்டின் கொலையை ‘மூடிய கதவின் அடியில் இருந்து பாயும் ரத்தத்தைப்போல் இருந்தது’ என்கிறார். இவர் பிரபல ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்சின் நெருங்கிய நண்பர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
டப்ளின் எழுச்சி
டப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை மேலும்