Your cart is empty.
ஜீவன் பென்னி
பிறப்பு: 1982
இயற்பெயர் – பீ. மதார் மைதீன், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை இயற்பியல் முடித்தவர். பணியின் காரணமாகத் தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளாக வாழ நேர்ந்த பிற மாநிலங்களின் நகரங்களிலும் கிராமங்களிலும் தெரிந்திடாத மக்களிடையே செய்த பயணங்களும், சூழல்களும், கிடைத்த நட்புகளுமே எல்லாவற்றையும் கவனிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தது என நம்பிக்கொண்டிருப்பவர். 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து கவிதைகளும் கவிதை சார்ந்த விமர்சனங்களும் எழுதிவருகிறார்.
‘நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது’ (2009), ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ (2017), ‘சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்’ (2020) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். இது இவரது நான்காவது கவிதைத் தொகுப்பு