Your cart is empty.
ஜயந்த் காய்கிணி
பிறப்பு: 1955
ஜயந்த் காய்கிணி (பி. 1955) ஜயந்த் காய்கிணி: பிறந்தது கடற்கரை புனித கோவில் நகரமான கோகர்ணாவில். உயர் வேதியியல் துறையில் பட்டம் பெற்று, மும்பையில் மருந்தாக்கத் தொழில் நிறுவனம் ஒன்றில் இருபதாண்டுகளாகப் பணிபுரிந்து, தற்போது பெங்களூருவில் வசிக்கிறார். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக எழுத்தாளர், கன்னட சினிமா பாடலாசிரியர், வசனகர்த்தா. ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஐந்து கவிதைத் தொகுப்புகளும் மூன்று நாடகத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. பெருமைக்குரிய பல விருதுகளைப் பெற்றவர். கர்நாடக சாகித்ய அகாடெமியின் நான்கு விருதுகள், குசுமாக்ராஜ் ராஷ்ட்ரீய பாஷா புரஸ்கார், கதா தேசிய விருது, நான்கு ஃபில்ம் ஃபேர் விருதுகள், சினிமா பாடல் - வசனத்திற்காக இரண்டு கர்நாடக மாநில விருதுகள் பெற்றவர். தும்கூர் பல்கலைக் கழகம் இவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இவரது ‘நோ ப்ரெசெண்ட் ப்ளீஸ்’ சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘தென்னாசிய இலக்கிய 2018’ இன் டி.எஸ்.சி. விருதைப் பெற்றிருக்கிறது. பெங்களூர் ‘அட்ட கலாட்டா இலக்கிய விழா 2018’ புனைகதைகளுக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மகிழம்பூ மணம்
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது. சிறிய ஊரிலிருந்து வ மேலும்