Your cart is empty.
கே. பழனிவேலு
பிறப்பு: 1966
மரபிலக்கியப் புலமையராகிய கே. பழனிவேலு, பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆய்வுலகிற்கு அறிமுகமானவர். பேரா. பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் வழித் தமிழ் அகராதியியல் புலமையராகவும் விளங்குபவர். இவர் உருவாக்கிய ‘தமிழர் தம் கல்வி வரலாறு’ எனும் ஆராய்ச்சி இவருக்குக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழுக்கான இளம் அறிஞர் விருதினைப் பெற்றுத் தந்தது. இவரது நூல்களுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுகளை அளித்துச் சிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆராய்ச்சி விருதிற்காக முனைவர் பட்ட மேலாய்வை மேற்கொண்டவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
கட்டமைப்பினாலும் எடுத்துரைப்பு முறையாலும் உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்றாகத் திகழும் சிலப்ப மேலும்