Your cart is empty.
கே.ஏ. குணசேகரன்
பிறப்பு: 1955
கே. ஏ. குணசேகரன் கேயேஜி என்றழைக்கப்படும் கரு. அழ. குணசேகரன் (12.05.1955) சிவகங்கைச் சீமையிலுள்ள இளையான்குடி வட்டத்திலுள்ள மாரந்தை கிராமத்தில் பிறந்தார். நாட்டுப்புறக்கலை, திரைப்படக் கலை, நாடகக்கலை ஆகிய ஊடகங்களின் வழியாகப் பரவலாக அறியப்பட்டவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தலித் இசை, தலித் நாடகம் முதலான கருத்தாக்கங்கள் தமிழில் காலூன்றவும் வலுப்பெறவும் முக்கியக் காரணியாகச் செயல்பட்டு வருகிறார். புதுவை பல்கலைக்கழகத்தில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தாய்: பாக்கியவதி அம்மாள், தந்தை: கரு. அழகன். முகவரி: டாக்டர் கே. ஏ. குணசேகரன் 81, முதன்மைச் சாலை பாரதி நகர், புதுவை 605 008 மின்னஞ்சல்: kagunasekaran2001@yahoo.com