Your cart is empty.
க.நா. சுப்ரமண்யம்
பிறப்பு: 1912
பொய்த் தேவு க.நா. சுப்ரமண்யம் (1912-1988) க.நா. சுப்ரமண்யம் 31.1.1912இல் தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் செயல்பட்டார். ஐரோப்பியப் படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச்செய்த பெருமை க.நா.சு.வுக்கு உண்டு. தமிழிலக்கியத்தின் சிறப்பான பகுதிகளைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார். சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். இவரது முதல் நாவல் ‘பசி’. சிறந்த படைப்பாளியான க.நா.சு., முன்னோடி விமர்சகராகவே தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்படுகிறார். 1979இல் குமாரன் ஆசான் நினைவு விருதும், 1986ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருதும் பெற்றார். 16.12.1988இல் புதுதில்லியில் காலமானார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பொய்த் தேவு
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான் மேலும்