Your cart is empty.
கபீர்
பிறப்பு: 1398 - 1448
வடஇந்திய பக்தி இலக்கிய மரபின் மகாகவி கபீர். அவதி மொழியில் பாடப்பட்ட இவரது பாடல்கள் இந்தி இலக்கியத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. இவரது வாழ்வைக் குறித்து வழங்கிவரும் வாய்மொழிக் கதைகளிலிருந்து கபீர் 1398ஆம் ஆண்டு காசிக்கு அருகிலுள்ள மகார் என்ற ஊரில் நெசவைக் குலத்தொழிலாகக் கொண்ட இஸ்லாமியத் தம்பதிக்குப் பிறந்ததாக நம்பப்படுகிறது. இவருக்கு லோபி என்ற மனைவியும் கமால், கமாலி என்று இரு குழந்தைகளும் இருந்ததாகப் பிற்கால நூல்கள் சொல்கின்றன. தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் காசியிலேயே கழித்த கபீர் 1448ஆம் ஆண்டு மகாரில் மறைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
கபீர் பாடல்கள் வாய்மொழிப்பாடல்களாகவே பிரபலமடைந்தன. பேச்சு மொழியில் அமைந்த அவரது ஈரடிப் பாடல்களைச் மேலும்