Your cart is empty.
களந்தை பீர்முகம்மது
பிறப்பு: 1953
களந்தை பீர்முகம்மது (பி. 1953) திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் களக்காடு சொந்த ஊர். 1983 முதல் எழுதிவருகிறார். முதல் கதை ‘தயவுசெய்து’. எழுத்துலக வாழ்வின் 25ஆம் ஆண்டின் முதல் கதை ‘யாசகம்’. இவ்விரண்டு கதைகளும் ‘இலக்கியச் சிந்தனை’யின் ஆண்டுப் பரிசுகளைப் பெற்றன. ‘இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்’, ‘சுழல்’, ‘சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்’, ‘பிறைக்கூத்து’ என நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம்’ கட்டுரை நூலின் தொகுப்பாசிரியர். ‘பா. செயப்பிரகாசம் படைப்புலகம்’, ‘சலாம் இஸ்லாம்’, இஸ்லாமிய இலக்கியக் கழகத்துக்காக ‘இஸ்லாமியச் சிறுகதைகள்’ ஆகிய நூல்களையும் தொகுத்துள்ளார்.திருப்பூர் தமிழ்ச் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், ஜோதிவிநாயகம் நினைவுப் பரிசு, லில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசு, சேலம் நாகப்பன் இராஜலெட்சுமி நினைவுப் பரிசு, இஸ்லாமிய இலக்கியக் கழகப் பரிசுகளும் கிடைத்துள்ளன. காலச்சுவடு இதழின் இணையாசிரியர். தி இந்து (தமிழ்), சிந்தனைச் சரம் இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். முகவரி : 31-B தைக்கா தெரு, ஆழ்வார் திருநகரி அஞ்சல், திருவைகுண்டம் (வழி), தூத்துக்குடி மாவட்டம் - 628 612. மின்னஞ்சல் : kalanthaipeermohamed@gmail.com