Your cart is empty.
கமலாதாஸ்
பிறப்பு: 1921
கமலா தாஸ் (1934 - 2009) மலையாளத்தில் புனைகதை எழுத்தாளர் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கவிஞர் கமலா தாஸாகவும் அறியப்பட்டவர். மலையாள மொழியின் முக்கிய பெண்கவிஞரான பாலாமணியம்மா, மாத்ருபூமி நாளிதழின் இயக்குநர் வி.எம். நாயர் ஆகியோரின் மகள். எழுத்தாளர், கவிஞர், பத்தியாளர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்றவர். நாவல், சிறுகதை, சுயசரிதை, பத்தி ஆகியவற்றின் நூல்வடிவங்களாக இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. கமலா தாஸின் சிறுகதைகளை ஆதாரமாகக்கொண்டு சில திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிய கவிதைப் பரிசு, கென்ட் விருது, ஆசான் கவிதை விருது, கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாகித்திய அக்காதெமி விருதுகள், வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகியவற்றைப் பெற்றவர். புகழ்பெற்ற இந்து நிலவுடைமைக் குடும்பமான நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த கமலா காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார். இறுதி நாட்களில் புனேயில் வசித்தார். முக்கிய நூல்கள்: ‘என்டெ கத’ (என் கதை); ‘நீர்மாதளம் பூத்த காலம்’; ‘ஒற்றயடிப்பாத’ (ஒற்றையடிப் பாதை); ‘மாதவிக்குட்டியுடெ கதகள்’ (மாதவிக்குட்டியின் கதைகள்); ‘கமலா தாஸின்டெ திரஞ்ஞெடுத்த கவிதகள்’ (கமலா தாஸின் தேர்ந்தெடுத்த கவிதைகள்); ‘Summer in Calcutta’; ‘Old playhouse and other poems’; ‘Only the soul knows how to sing.’