Your cart is empty.
கருணாகரன்
பிறப்பு: 1963
கருணாகரன் (பி. 1963) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சியில் பிறந்தவர் கருணாகரன். ஈழப் போராட்ட அமைப்புகளின் வெளியீடுகளான பொதுமை, வெளிச்சம் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சுயாதீன ஊடகவியலாளராகச் செயற்பட்டுவருகிறார். பத்தி எழுத்து, ஒளிப்படத்துறை ஆகியவற்றிலும் ஈடுபாடு. ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’, ‘ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’, ‘நெருப்பின் உதிரம்’ என ஆறு கவிதை நூல்களும், ‘வேட்டைத்தோப்பு’ சிறுகதைத் தொகுப்பும், ‘இப்படியொரு காலம்’ கட்டுரை நூலும் இதுவரை வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் : poompoom2007@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்
இலங்கையில் 2009 அழிவிற்குப் பின்னான, மீந்துபோன மனிதர்களின் வாழ்வைக் குறித்துப் பெரும் ஏக்கத்துடன் மேலும்