Your cart is empty.
கிருபா ஜி
பிறப்பு: 1986
சென்னையைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது கட்டுரைகளும் பண்பாட்டு ஆய்வுகளும் தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபர்ஸ்ட் போஸ்ட் ஆகிய இந்திய இதழ்களிலும் பன்னாட்டு இதழ்களிலும் வெளியாகியுள்ளன. டோடோ - சங்கம் எழுத்தாளர் முகாமில் 2016இல் பங்கேற்றார். அதே ஆண்டு படைப்பெழுத்துக்கான டோடோ விருதுக் குறும்பட்டியலிலும் இடம்பெற்றார். 2017இல் ‘சினிமாவில் பெண்கள்’ என்ற வாராந்தரப் பத்தியெழுத்துக்காக லாட்லி விருதைப் பெற்றார். ஜேசிபி இலக்கிய விருதுக்கான நெடும்பட்டியலில் இவரது நாவல் ‘வாட் வீ நோ அபௌட் ஹர்’ இடம் பெற்றிருந்தது. 2015 சென்னைப் பெருவெள்ளம் பற்றிய ஆய்வுநூலும் வெளியாகியுள்ளது.
