Your cart is empty.

கே.கே. ஷைலஜா
பிறப்பு: 1956
ஷைலஜா டீச்சர் என்று கேரளத்தில் பரவலாக அறியப்படும் கே.கே. ஷைலஜா கண்ணூர் மாவட்டத்திலுள்ள மாடத்தில் என்ற சிறிய கிராமத்தில் கம்யூனிச ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றில் பிறந்தார். கல்லூரி நாட்களிலேயே சமூக, அரசியல் செயல்பாடுகளில் பங்கெடுத்தார். ஆசிரியையாகப் பணியைத் தொடங்கியவர், பின்னர் அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுகொண்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் பல்வேறு மட்டங்களில் உறுப்பினராகப் பணியாற்றி, தற்போது அதன் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். 1996இல் முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016முதல் 2021வரை கேரள அரசில் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூகநீதித் துறையின் அமைச்சராக இருந்தார். தற்போது, மட்டானூர் தொகுதி எம்எல்ஏ. கேரளத்தின் பொதுச்சுகாதாரத் துறையை முழுமையாகச் சீரமைத்த பெருமைக்குரியவர். மலையாளத்தில் கம்யூனிசம், பாலினச் சமத்துவம், சுகாதாரம் தொடர்பாகப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.